வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் தூய்மை பணியாளருக்கு உலர் உணவு வழங்கும் நிகழ்ச்சி

வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் தூய்மை பணியாளருக்கு உலர் உணவு வழங்கும் நிகழ்ச்சி
X

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் முன்களப் பணியாளர்களுக்கு உலர் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எம்எல்ஏ பன்னீர் செல்வம் கலந்து கொண்டு வழங்கினார்.

வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உலர் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை இணைந்து கொரோனோ தொற்று ஊரடங்கால் வருவாய் இன்றி பாதிக்கபட்ட பேரூராட்சி முன்கள பணியாளர்களுக்கும் சத்தான உலர் உணவு பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

பேரூராட்சி செயல் அலுவலர் குகன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் பொருட்களை வழங்கினார்.சீர்காழி நகரில் முன்கள பணியாளர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டோருக்கு சத்தான உலர் உணவு பொருட்கள் கொண்ட தொகுப்பு வழங்கபட்டது. இவ்விழாவில் ரிலையன்ஸ் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரி நிர்வாகிகள் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!