மயிலாடுதுறையில் தொழிற்சங்க மையம், விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் தொழிற்சங்க மையம், விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

மயிலாடுதுறையில் விவசாயிகள் மற்றும்  தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறையில் இந்திய தொழிற்சங்க மையத்தினர் மற்றும் விவசாய சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரே மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து இந்திய தொழிற்சங்க மையம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட தலைவர்கள் சிம்சன், காபிரியேல், சீனி மணி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாய விளை பொருட்கள், உணவுப் பொருட்கள், உரம், கேஸ் ஆகியவற்றிற்கான மானியத்தை குறைத்ததை கண்டித்தும், சிறு, குறு நடுத்தரத் தொழில்களை மீட்டெடுக்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி விட எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாததை கண்டித்தும், 100 நாள் வேலைத்திட்டத்திற்கு 25 ஆயிரம் கோடி நிதியை குறைத்ததை கண்டிப்பது, எல்.ஐ.சி. உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதை கண்டிப்பது, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி குறைப்பு செய்வதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!