மயிலாடுதுறை கரக உற்சவத்தில் ஶ்ரீமகாகாளியம்மனுக்கு வெள்ளிகவசம்
புதுத்தெரு ஶ்ரீமகாகாளியம்மன் கரக உற்சவத்தை முன்னிட்டு, புதிதாக செய்யப்பட்ட வெள்ளிகவசம் சார்த்தும் நிகழ்ச்சி ஹோமத்துடன் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரம் 2வது புதுத்தெருவில் பழைமையும், பிரசித்தியும் பெற்ற ஶ்ரீ மகா காளியம்மன் ஆலயம் உள்ளது. அருகில் உள்ள கொத்தத்தெரு ஶ்ரீ பெரிய மாரியம்மன் ஶ்ரீமகா காளியம்மனின் சகோதரியாக கருதப்படுவதால் 5 புதுத்தெரு வாசிகளால் ஆண்டுதோறும் பங்குனி மாதம் இரு அம்பிகைகளுக்கும் அலங்கார கரகம் எடுத்து வீதியுலா நடத்தப்பட்டு வழிபாடு செய்வது வழக்கம்.
அவ்வகையில் இந்த ஆண்டு புதுத்தெரு ஶ்ரீ மகாகாளியம்மன் ஆலயத்தில் கரக உற்சவம் 2 நாள் திருவிழாவாக கணபதி ஹோமத்துடன், நேற்று துவங்கியது. நவக்கிரக ஹோமம், மகாகாளி ஹோமம் பாசுபதாஸ்திரம் ஹோமங்கள் செய்யப்பட்டு ஸ்ரீ மகா காளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மகாதீபாராதனை செய்யப்பட்டது. பக்தர்களால் புதிதாக வழங்கப்'பட்ட வெள்ளி கவசங்கள் ஶ்ரீமகாகாளியம்மனுக்கு சார்த்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று மாலை காளி ஆட்டம், இன்று காலை பால்குடம் எடுத்து அபிஷேகம், இரவு ஶ்ரீமகாகாளியம்மன் மற்றும் கொத்ததெரு ஶ்ரீபெரிய மாரியம்மன் ஆகிய 2 அம்பிகைகளின் அலங்கார கரகங்கள் காவிரி துலாக்கட்டத்தில் இருந்து புறப்பட்டு வீதியுலா, விடியவிடிய நடைபெறவுள்ளது. பின்னர், நடைபாவாடை திருவிழாவுடன் கரகங்கள் ஆலயத்தில் இறக்கி வைக்கப்படும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu