மயிலாடுதுறையில் 4 இடங்களில் துணைமின் நிலையம் அமைப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்

மயிலாடுதுறையில் 4 இடங்களில் துணைமின் நிலையம் அமைப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்
X

மயிலாடுதுறை மாவட்டத்தில்  4 இடங்களில் துணை மின் நிலையம்  அமைத்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறையில் 4 இடங்களில் துணைமின் நிலையம் அமைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது-

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறைந்தமின் அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க மாவட்டத்தில் 4 இடங்களில் துணைமின் நிலையம் அமைப்பது தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டததிற்கு பூம்புகார் தொகுதி எம்எல்ஏ நிவேதாமுருகன் தலைமை வகித்தார்.

மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார், ஒன்றியக்குழுத்தலைவர் காமாட்சிமூர்த்தி, மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர் முத்துக்குமரசாமி, சீர்காழி மின்வாரிய செயற்பொறியாளர் சதீஷ்குமார், 4 கூடுதல் கோட்டப்பொறியாளர்கள் மயிலாடுதுறை குத்தாலம் பகுதிகளைச் சேர்ந்த 12க்கும்மேற்பட்ட மின்வாரிய இளநிலைப்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்,

எம்எல்ஏ நிவேதாமுருகன் பேசுகையில், கோடை காலத்தில் மின் நிறுத்தம் செய்யாமல் இருப்பதற்கும், குறுவை விவசாயம் பெரும்பாலும் நிலத்தடிநீரை கொண்டு செய்துவருவதால் குறைந்தமின் அழுத்தம் இல்லாமல் விவசாயத்திற்குத் தேவையான மின்சாரத்தை வழங்க நடவடிகை எடுக்கவேண்டும் என கேட்டுகொண்டார்.

குறைந்த மின் அழுத்தம் மற்றும் மின்நிறுத்தம் இல்லாமல் இருப்பதற்கு திருக்கடையூர், சங்கரன்பந்தல், வடமட்டம் ஆகிய இடங்களில் துணைமின் நிலையங்கள் அமைப்பதற்கும், வழுவூரில் துணை மின்நிலையத்துடன் கூடிய துணை அலுவலகம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது என்றார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்