மயிலாடுதுறை எஸ்பி அலுவலகம் கட்டுமிடம்: வீட்டுவசதி வாரிய டிஜிபி ஆய்வு

மயிலாடுதுறை எஸ்பி  அலுவலகம்  கட்டுமிடம்:  வீட்டுவசதி வாரிய டிஜிபி  ஆய்வு
X

மயிலாடுதுறை மாவட்காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை காவலர் வீட்டுவசதி வாரிய டிஜிபி விஸ்வநாதன் நேரில் பார்வையிட்டுஆய்வு செய்தார்:-

புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டுவதற்காக 15.5 கோடி நிதிஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்தது

மயிலாடுதுறை மாவட்காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை காவலர் வீட்டுவசதி வாரிய டிஜிபி விஸ்வநாதன் நேரில் பார்வையிட்டுஆய்வு செய்தார்.

தமிழகத்தின் 38வது புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வணிகவரி அலுவலக கட்டிடத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வேளாண்மைதுறை அலுவலகத்திலும் தற்காலிகமாக இயங்கி வருகிறது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கான புதிய கட்டிடம் கட்டுவதற்காக மண்ணம்பந்தல் பால்பண்ணை பகுதியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இடம் வாங்கப்பட்டு 114 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிட கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டுவதற்காக 15.5 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்படும் இடத்திற்கு அருகிலேயே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டுவதற்காக 4.5 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தினை இன்று மயிலாடுதுறைக்கு வந்த காவலர் வீட்டுவசதி வாரிய டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .நிஷா, காவல் ஆய்வாளர்கள் சதீஷ், செல்வம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil