மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு : வனத்துறையிடம் ஒப்படைப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு : வனத்துறையிடம் ஒப்படைப்பு
X

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்  வீட்டிற்குள் புகுந்த பாம்பை,. பாம்பு பாண்டியன் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பை, பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செம்பதனிருப்பு மன்மதசுவாமி தெருவைச் சேர்ந்த மோகன் என்பவரின் வீட்டின் பின்புறத்தில் நல்ல பாம்பு புகுந்தது.

இதனையடுத்து மோகன் சீர்காழி பகுதியைச் சேர்ந்த பாம்பு பாண்டியனுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த பாம்பு பாண்டியன் ஒரு கம்பியை கொண்டு சுமார் 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பை லாவகமாக பிடித்து பாதுகாப்பாக பாட்டிலில் அடைத்தார். பின்பு பாம்பை சீர்காழி வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!