சீர்காழி ஜெயின் சங்கம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ 5 லட்சம் வழங்கியது

சீர்காழி ஜெயின் சங்கம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு  ரூ 5 லட்சம் வழங்கியது
X

சீர்காழி ஜெயின் சங்கம் சார்பாக ரூ 5 லட்சத்துக்கான காசோலை மற்றும் 300 நபர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கபட்டது.

சீர்காழி ஜெயின் சங்கத்தினர் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ 5 லட்சத்திற்கான காசோலையை ஆர்டிஓ நாராயணனிடம் வழங்கினர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஜெயின் சங்கத்தின் சார்பாக முதல்வரின் கொரோனா தொற்று நிவாரண நிதிக்காக ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலையை வருவாய் கோட்டாட்சியர் நாராயணனிடம் வழங்கினர்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் ,நாட்டுப்புற இசை கலைஞர்கள்,தூய்மை பணியாளர்கள் என 300 பேருக்கு அரிசி,மளிகை பொருட்கள்,காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கினர்.

ஜெயின் சங்க தலைவர் சுரேஷ் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற நிகழ்ச்சியீல் சீர்காழி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு நலதிட்ட உதவிகளை வழச்கினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்