செம்பனார்கோயிலில் தெரு கூத்து மூலம் கொரோனா விழிப்புணர்வு

செம்பனார்கோயிலில் தெரு கூத்து மூலம் கொரோனா விழிப்புணர்வு
X

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் போலீசார் வீதி நாடகம் மூலம் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

செம்பனார்கோயிலில் போலீசார் தெரு கூத்து மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

ஆக்கூரில் காவல்துறை சார்பில் நடைபெற்ற கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாட்டுப்பறக்கலைஞர்கள் நடத்திய வீதி நாடகத்தில் முககவசம் அணியாமல் வந்தவர்களை வறுத்தெடுத்து நாட்டுப்புறக்கலைஞர்கள் அறிவுரை வழங்கினர்:-

கொரோனா தொற்று 2வது அலை வேகமாக பரவி வருவதை உணர்த்தும் வகையில்; பொதுமக்கள் யாரும் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்பதை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு வீதி நாடகம் நடைபெற்றது.

செம்பனார்கோவில் காவல் சரகத்திற்குட்பட்ட ஆக்கூர், செம்பனார்கோவில் கடைவீதியில்; கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் காவல்துறையினர் விழிப்பணர்வு வீதி நாடகத்தை நடத்தினர்.

இதில் எமதர்மராஜா, சித்திரகுப்தர், எமதூதர் வேடமணிந்து நாட்டுப்புறக்கலைஞர்கள் முககவசம் அணியாமல் வந்தவரை பாசக்கயிற்றால் சிறைபிடித்து முககவசம் அணியாமல் ஏன் வந்தாய் என்று வறுத்தெடுத்தனர்.

உடனடியாக அவர் வண்டியில் வைத்திருந்த முககவசத்தை எடுத்து அணிந்து கொண்டார். தொடர்ந்து நாட்டுப்புறப்பாடல் பாடி கொரோனா வைரஸ் பரவல் குறித்து எச்சரிக்கை செய்து வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தினர்.

முககவசம் அணியாமல்; வந்தவர்களுக்கு முககவசம் வழங்கினர். செம்பனார்கொவில் காவல் ஆய்வாளர் சுகந்தி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சோப்பு போட்டு கைகழுவ வேண்டும், வீட்டைவிட்டு வெளியில் வரக்கூடாது போன்ற கருத்துக்களை நகைச்சுவை உணர்வுடன் பொதுமக்களுக்கு எடுத்து கூறினர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!