ட்ராபிக் ராமசாமிக்கு மயிலாடுதுறையில் பொதுத் தொழிலாளர்கள் சங்கம் அஞ்சலி

ட்ராபிக் ராமசாமிக்கு மயிலாடுதுறையில் பொதுத் தொழிலாளர்கள் சங்கம் அஞ்சலி
X
ட்ராபிக் ராமசாமிக்கு மயிலாடுதுறையில் பொதுத் தொழிலாளர்கள் சங்கத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

பொதுமக்களின் நலன் கருதி சென்னை உயர்நீதிமன்றத்திலும் நீதிமன்றங்களிலும் பொதுநல வழக்குகள் பலவற்றைத் தொடர்ந்து மக்களுக்காக, பாடுபட்டு வந்த டிராபிக் ராமசாமி நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார்.

இதையடுத்து அவருக்கு மயிலாடுதுறையில் பொதுமக்கள் சார்பில் பொது தொழிலாளர்கள் சங்க அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன், தலைமை வகித்து டிராபிக் ராமசாமியின் உருவப்படத்திற்கு புஷ்ப அஞ்சலி செலுத்தினார். இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்