மயிலாடுதுறை மாவட்டத்தின் போலீஸ் எஸ்பியாக பொறுப்பேற்ற சுகுணாசிங்

மயிலாடுதுறை மாவட்டத்தின் போலீஸ் எஸ்பியாக பொறுப்பேற்ற சுகுணாசிங்
X

மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் எஸ்பியாக பொறுப்பேற்றுக் கொண்ட சுகுணாசிங்

மயிலாடுதுறை மாவட்டத்தின் போலீஸ் எஸ்பியாக சுகுணாசிங் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்டத்தின் 2-வது காவல் கண்காணிப்பாளராக சுகுணாசிங் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதிதாக உருவாகியுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தை முழுமையான காவல் மாவட்டமாக உருவாக்க துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பொதுமக்களுக்காகத்தான் காவல்துறை உள்ளது என்பது உறுதிப்படுத்தப்படும். பொதுமக்களின் நண்பன் காவல்துறை என்ற வகையில் காவல்நிலையங்களின் பொதுமக்களின் பிரச்னைகள் குறித்து உரிய முறையில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் ஒத்துழைப்புடன் பாலியல் குற்றங்கள், மணல் திருட்டு, சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை போன்ற குற்றச்செயல்கள் தடுக்கப்படும் என்றார். மேலும் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக அனைவரும் அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளித்து செயல்பட வேண்டும் என்றார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!