மயிலாடுதுறை: கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

மயிலாடுதுறை: கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்
X
மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் மூட்டைகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு 70,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் சம்பா, தாளடி சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் அறுவடைப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், தாமதமாக நடவு செய்த விவசாயிகள் தற்போது அறுவடையை தொடங்கியுள்ளனர்.

விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்மணிகளை விற்பனை செய்ய மாவட்டத்தில் 165 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்துள்ளது. ஆனால், இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் பதிவு செய்து விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைகளை அடுக்கி வைத்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று காலை முதல் பெய்த தொடர்மழையால் விவசாயிகள் அடுக்கி வைத்திருந்த நெல் மூட்டைகள்; பல்வேறு இடங்களில் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளது. தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள கஞ்சாநகரம் கிராமத்தில் அமைந்துள்ள திறந்தவெளி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் அடுக்கி வைத்துள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்துவிட்ட நிலையில், தேங்கி நிற்கும் நீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அரசு போதிய அளவில் தார்ப்பாய்கள் வழங்கவில்லை என குற்றம்சாட்டியுள்ள விவசாயிகள், கொள்முதலின்போது ஈரப்பதத்தை கணக்கில் கொள்ளாமல் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்