மயிலாடுதுறையில் கொரோனா தடுப்பூசி போட நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்

மயிலாடுதுறையில் கொரோனா தடுப்பூசி போட  நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்
X

மயிலாடுதுறையில் தியாகி நாராயணசாமி நகராட்சி பள்ளியில், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்.

மயிலாடுதுறையில் தியாகி நாராயணசாமி நகராட்சி பள்ளியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு காலை முதலே வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.

மயிலாடுதுறையில் தியாகி நாராயணசாமி நகராட்சி பள்ளியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு காலை 6 மணி முதலே நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தைப் பொறுத்தவரை நேற்று கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தடுப்பூசி போட ஆர்வம் காட்டுகின்றனர்.

இன்று மயிலாடுதுறையில் தியாகி நாராயணசாமி நகராட்சி பள்ளியில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை 250 பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது ஆனால், மயிலாடுதுறையில் மக்கள் காலை 6 மணி முதலே 500க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் காத்து வருகின்றனர். பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வமாக இருந்தும் தடுப்பூசி தட்டுப்பாட்டால் கவலை அடைந்துள்ளனர்.

Tags

Next Story
நாமக்கல் துளிர் 2025 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!