மயிலாடுதுறையில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்ட 100 கோடியில் டெண்டர் : மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
பைல் படம்
தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.
இதில் வருவாய்த்துறை முழுமையாக பிரிக்கப்பட்டாலும் மற்ற அனைத்து துறைகளும் நாகை மாவட்ட கட்டுப்பாட்டில் தான் இதுவரை இயங்கி வருகிறது.
மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் வணிக வரி வளாக கட்டிடத்திலும் மாவட்ட. காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வேளாண்மைத்துறை புதிய கட்டடத்தின் மாடி பகுதியில் தற்போது இயங்கி வருகிறது.
மயிலாடுதுறை புதிய மாவட்டம் அறிவிப்பதற்கு முன்பாகவே மாவட்டத்திற்கான இடங்களை தருமபுரம் ஆதீனம் வழங்குவதாக ஒப்புதல் அளித்திருந்தார்.
அதனடிப்படையில் பால்பண்ணை பகுதியில் உள்ள 8.5 ஹெக்டேர் இடத்தில் ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டிருந்தது.
அதன்பிறகு சட்டசபை தேர்தல் வந்ததால் பணிகள் கிடப்பில் இருந்த நிலையில். புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நிரந்தர கட்டடம் கட்டுவதற்காக பொதுப்பணித்துறை கட்டட அமைப்பு, கட்டட வட்டம் திருச்சி சார்பில் 100 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகளுக்கான டெண்டரை வெளியிட்டுள்ளது.
ஒப்பந்தபடிவங்கள் வரும் 17ம் தேதி முதல் ஜுலை 22ம் தேதிவரை பெற்றுக்கொள்ளலாம் என்றும். பணிகளை 18 மாதங்களுக்கு முடிக்க வேண்டுமென்றும் அந்த டெண்டரில் தெரிவித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டுமான பணிக்கான டெண்டர் வெளியிடப்பட்டிருப்பது மாவட்ட மக்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu