மயிலாடுதுறை நகராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் 75வயது மூதாட்டி வேட்பு மனு
நாம் தமிழர் கட்சி சார்பில்மனு தாக்கல் செய்த 75 வயது மூதாட்டி சொர்ணாம்பாள்
மயிலாடுதுறை நகராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் 75வயது மூதாட்டி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. கடந்த மாதம் 28 ந்தேதி முதல் தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெற உள்ளதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி உள்ளனர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 23 வார்டுகளில் நாம் தமிழர் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் 17-வது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் 75 வயது மூதாட்டி சொர்ணாம்பாள் என்பவர் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். வயது முதிர்ந்த மூதாட்டி என்று பாகுபாடு பார்க்காமல் நாம் தமிழர் கட்சியில் சீட் கொடுத்துள்ளது. அனைவரையும் ஆச்சரித்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக மனுத்தாக்கல் செய்ய வரும்போது கரும்பு விவசாயி சின்னமான கரும்புகளை கைகளில் எடுத்து வந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu