மயிலாடுதுறை நகராட்சி 19 வது வார்டுஅதிமுக வேட்பாளர் மரணம்: தேர்தல் ஒத்திவைப்பு

மயிலாடுதுறை நகராட்சி 19 வது வார்டுஅதிமுக  வேட்பாளர் மரணம்: தேர்தல் ஒத்திவைப்பு
X

மரணமடைந்த மயிலாடுதுறை நகராட்சியின் அதிமுக வேட்பாளர் அன்னதாட்சி

அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளர் இறந்ததால் மயிலாடுதுறை நகராட்சி 19வது வார்டு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

மயிலாடுதுறை நகராட்சி 19வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் காலமானதால் தேர்தல் ஒத்திவைகே்கப்பட்டது.

மயிலாடுதுறை நகராட்சியில் 36வார்டுகள் உள்ளது. நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 211 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு ஒரு வாரம் உள்ள நிலையில் 19வது வார்டு அதிமுக வேட்பாளர் அன்னதாட்சி(64) என்பவர் நேற்று இரவு மாரடைப்பால் காலாமானார். அதனையடுத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளர் இறந்ததால் மயிலாடுதுறை நகராட்சி 19வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் விதி 34(1)(C) தமிழ்நாடு நகராட்சிகள், பேரூராட்சிகள், மற்றும் மாநகராட்சி தேர்தல்கள் 2006 விதிகளின்படி தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக மயிலாடுதுறை நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையருமான பாலு அறிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!