மயிலாடுதுறை நகராட்சி நிலைக்குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு

மயிலாடுதுறை நகராட்சி நிலைக்குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு
X

மயிலாடுதுறை நகராட்சியில் இன்று நடைபெற்ற தேர்தலில் நிலைக்குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

மயிலாடுதுறை நகராட்சியில் இன்று நடைபெற்ற தேர்தலில் நிலைக்குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

மயிலாடுதுறை நகராட்சியில் இன்று நடைபெற்ற தேர்தலில் மயிலாடுதுறை நகராட்சி நிலைக்குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தல் இன்று நடைபெற்றது. நகராட்சி தலைவர் என்.செல்வராஜ், துணைத்தலைவர் எஸ்.சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற தேர்தலில் நகராட்சி ஆணையர் க.பாலு தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்பட்டார்.

இதில், நிலைக்குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். நியமனக்குழு உறுப்பினராக 29 வது வார்டு கவுன்சிலர் மா.ரஜினி, ஒப்பந்தக்குழு உறுப்பினராக 22-வது வார்டு கவுன்சிலர் எஸ்.உஷாராணி, வரிவிதிப்பு மேல்முறையீட்டுக்குழு உறுப்பினர்களாக 1-வது வார்டு ர.ஜெயந்தி, 15-வது வார்டு உ.ஜெயந்தி, 18-வது வார்டு ச.காந்திராஜா, 30-வது வார்டு மோ.சக்திவிஜய் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Tags

Next Story