மயிலாடுதுறையில் பள்ளிவாசல்களுக்கு பலத்த பாதுகாப்பு
தொழுகைக்கு அனுமதி இல்லாததால் மூடப்பட்டுள்ள மசூதி.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைகளை தவிர யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட இருப்பதால் அனைவரும் பள்ளிவாசலில் தொழுகை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், இஸ்லாமியர்கள் அவரவர் வீடுகளிலேயே தொழுகையை மேற்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா வடகரையில் உள்ள ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் மற்றும் அரங்கக்குடியில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் ஆகிய இரண்டு பள்ளிவாசல்களில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தொழுகை செய்து கொண்டாடுவது வழக்கம்.
இந்த ஆண்டு தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி பள்ளிவாசல்களுக்கு தொழுகைக்கு வராமல் தங்களது வீடுகளிலேயே தொழுகையை முடித்து உள்ளனர். மேலும் எந்த ஒரு பிரச்சினையும் நடைபெறாமல் இருக்க மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா உத்தரவின்பேரில் செம்பனார்கோவில் போலீசார் பள்ளிவாசல் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu