மயிலாடுதுறை - காரைக்குடி சிறப்பு விரைவு ரயில் சேவை: எம்பி தொடக்கி வைப்பு..

மயிலாடுதுறை - காரைக்குடி சிறப்பு விரைவு ரயில் சேவை:  எம்பி  தொடக்கி வைப்பு..
X

மயிலாடுதுறை - காரைக்குடிக்கு சிறப்பு விரைவு ரயில் சேவையை மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் ராமலிங்கம்  கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Mayiladuthurai to Karaikudi Train-ரயிலை மீண்டும் இயக்கியபோதிலும், சிறப்பு ரயில் ஆக மாற்றம் செய்யப்பட்டது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Mayiladuthurai to Karaikudi Train-மயிலாடுதுறை - காரைக்குடிக்கு சிறப்பு விரைவு ரயில் சேவையை மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறையில் ஜங்ஷனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர்-காரைக்குடி இடையிலான விரைவு ரயில் சேவையை, மக்களவை உறுப்பினர் இராமலிங்கம் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். மயிலாடுதுறையில் ஜங்ஷனில் இருந்து காலை 6:45 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் 7.45 மணிக்கு திருவாரூர் செல்லும். அங்கிருந்து 8.15 மணிக்கு புறப்பட்டு மதியம் காரைக்குடி சென்றடையும்.அங்கிருந்து 2.15-க்கு புறப்பட்டு இரவு 8.10 மணிக்கு மயிலாடுதுறை வந்தடையும். ஏற்கெனவே பாசஞ்சர் ரயில் ஆக ஓடிக்கொண்டிருந்த, இந்த ரயில் சேவை கொரனா தொற்று காரணமாக, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று ரயிலை மீண்டும் இயக்கினாலும், சிறப்பு ரயில் ஆக மாற்றம் செய்யப்பட்டது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து திருவாரூருக்கு 30 ரூபாய் கட்டணமும் காரைக்குடிக்கு 75 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், நகர செயலாளர் குண்டாமணி என்ற செல்வராஜ் , குத்தாலம் ஒன்றிய பெருந்தலைவர் மகேந்திரன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
ai solutions for small business