மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு படுக்கைகள் : எம்எல்ஏ ராஜ்குமார் வழங்கல்

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு  படுக்கைகள் :  எம்எல்ஏ ராஜ்குமார்  வழங்கல்
X

சின்ஜெண்டா  தனியார் நிறுவனம் சார்பில் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின்கீழ்  50 படுக்கைகளை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு எம்எல்ஏ ராஜ்குமார் மூலம் வங்கியது.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு படுக்கைகளை எம்எல்ஏ ராஜ்குமார் வழங்கினார்.

அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி தட்டுப்பாட்டை போக்கும் வகையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இந்தியாவின் முன்னணி விவசாய நிறுவனமான சின்ஜெண்டா என்ற தனியார் நிறுவனம் சார்பில் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின்கீழ் மருத்துவ படுக்கைகள் வழங்கப்பட்டு வருகிறது.

தர்மபுரி, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைகளுக்கு 200 படுக்கைகள் வழங்க திட்டமிடப்பட்டது.

அவ்வகையில், மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அந்நிறுவனத்தின் சரக மேலாளர் விக்னேஸ்வரன் 50 படுக்கைகள், மெத்தைகள், தலையணைகள் மற்றும் படுக்கைவிரிப்புகள் ஆகியவற்றை வழங்கினார்.

அதனை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், மாவட்ட இணை இயக்குநர் மகேந்திரன் முன்னிலையில் மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் வழங்கினார். 50 படுக்கைகளின் மொத்த மதிப்பு ரூ.5.5 லட்சம் ஆகும்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!