மயிலாடுதுறை: அஜித் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து ரசிகர்கள் உற்சாகம்

மயிலாடுதுறை: அஜித் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து ரசிகர்கள் உற்சாகம்
X
மயிலாடுதுறையில் அஜித் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் இன்று மயிலாடுதுறையில் 2 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எதிர்பார்ப்பில் இருந்த அஜித் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். திரைப்படம் வெளியான ஒரு திரையரங்கில் ரசிகர்களுக்காக 6:30 மணி மற்றும் 10 மணி இரண்டு காட்சிகள் திரையிடப்பட்டது.

படம் பார்க்க வந்த ரசிகர்கள் திரையரங்கம் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடிய அஜித் ரசிகர்கள் அஜித் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும், முத்தமிட்டு செல்பி எடுத்து உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆளுயர அஜித் கட் அவுட்டை தூக்கிவைத்து உற்சாகக் குரலெழுப்பி மாலை அணிவித்து அஜித் புகைப்படத்திற்கு முத்தமிட்டும் செல்ஃபி எடுத்தும் படம் வெளியான மகிழ்ச்சியை கொண்டாடிவிட்டு படம் பார்க்க சென்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!