மயிலாடுதுறையில் மக்களுக்கு உதவ திமுக சார்பில் சேவை எண் வெளியீடு

மயிலாடுதுறையில் மக்களுக்கு உதவ திமுக சார்பில் சேவை எண் வெளியீடு
X

செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2 ஊராட்சி செயலர்களுக்கு எம்எல்ஏ நிவேதாமுருகன் பணிநியமன ஆணையை வழங்கினார்.

மயிலாடுதுறையில் கொரோனா ஊரடங்கில் மக்களுக்கு உதவுவதற்காக திமுக சார்பில் சேவை எண் வெளியிடப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கலைஞர் பிறந்த தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக திமுக சார்பில் 9342378443 என்ற சேவை எண் வெளியீடு:- உணவு மற்றும் மருத்துவ நலத்திட்ட உதவிகளை மாவட்ட பொருப்பாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் நேரிடையாக சென்று வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்துள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக திமுக சார்பில் சேவைஎண் வெளியிட்டு திமுகவினர் உதவி செய்து வருகின்றனர்.

மாவட்ட திமுக சார்பில் செம்பனார்கோவிலில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, செம்பனார்கோவில் மேலமுக்கூட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் உருவப்படத்துக்கு எம்எல்ஏ நிவேதா முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் 20 பேருக்கு 14 வகையான மளிகைப் பொருட்கள், காய்கறிகளை அவர் வழங்கினார். செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2 ஊராட்சி செயலர்களுக்கு எம்எல்ஏ நிவேதாமுருகன் பணிநியமன ஆணையை வழங்கினார்.

தொடர்ந்து மயிலாடுதுறை பகுத்தறிவு மன்றத்தில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக திமுக சார்பில் 9342378443 என்ற சேவை எண்ணை எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்.

இந்த எண்ணை தொடர்பு கொண்டு உதவி கேட்டால் உணவு மற்றும் மருத்துவ நலத்திட்ட உதவிகளை திமுகவினர் செய்து வருகின்றனர். சேவை எண்ணை தொடர்பு கொண்டு உதவிகேட்ட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை கால்டக்ஸ் பகுதியை சேர்ந்த குடும்பத்தினருக்கு அத்தியாவசிய பொருட்களை மாவட்ட பொருப்பாளரும் எமமஎல்ஏவுமான நிவேதா முருகன் நேரடியாக சென்று வழங்கினார்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!