மயிலாடுதுறை மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம் : எம்எல்ஏ நிவேதா முருகன் தலைமையில் நடந்தது

மயிலாடுதுறை மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம் :  எம்எல்ஏ நிவேதா முருகன் தலைமையில் நடந்தது
X

மயிலாடுதுறை மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் எம்எல்ஏ நிவேதா முருகன் பேசுகிறார்.

மயிலாடுதுறை மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்றது.

மயிலாடுதுறையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட கழக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ நிவேதாமுருகன், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆறுகள், வாய்கால்கள் மற்றும் வடிகால்கள் ஆகியன 431 கி.மீட்டர் தூரத்துக்கு முதலமைச்சரின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் ரூ.5.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு துரித கதியில் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேட்டூரில் ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படும் காவிரி நீர் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தடைவதற்கு முன்னதாக அனைத்து ஊராட்சிகளிலும் வாய்கால்களை முறையாக தூர்வாரி நீர்வழிப்பாதையை சரிசெய்து, குளங்களில் நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் முயற்சியில் திமுக நிர்வாகிகள் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், மாவட்ட அவைத்தலைவர் சீனிவாசன், மாவட்ட பொருளாளர் ஜி.என்.ரவி, மாநில விவசாய அணி துணை செயலாளர் அருட்செல்வன் மற்றும் ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!