மயிலாடுதுறை மாவட்டத்தில் 4 நாள் மழையால் 1 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 4 நாள் மழையால் 1 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்
X
மயிலாடுதுறை மாவட்டத்தில் 4 நாள் மழையால் 1 லட்சம் நெல் மூட்டைகள் தேங்கி சேதம் அடைந்திருப்பதாக விவசாயிகள் கூறினார்கள்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம். சீர்காழி ஆகிய 4 தாலுகாக்களில் 165 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு ஆன்லைன் பதிவு முறையில் விவசாயிகளிடமிருந்து நடப்பு ஆண்டு சம்பா நெல்கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் கடந்த 4 நாட்களாக கொள்முதல் பணி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகளை கிடங்குக்கு எடுத்துச் செல்லும் பணியும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு கொள்முதல் நிலையங்களில் சுமார் ஒரு லட்சம் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. நேற்று முதல் மிதமான மழையாகவும், கனமழையாகவும் விட்டுவிட்டு பெய்வதால் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட மற்றும் விவசாயிகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையில் நினைந்து வருகிறது.

இதனால் நெல்மணிகள் நனைந்து முளைக்க தொடங்கி விட்டதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். விவசாயிகள் மற்றும் அரசுக்கு இழப்பு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே பிடித்தம் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கிடங்குக்கு எடுத்து செல்ல வேண்டும். அதேபோல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கொள்முதலை உடனே தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story