பூம்புகார் மீனவர்களிடம் மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பாளர் கலந்தாய்வு

பூம்புகார் மீனவர்களிடம் மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பாளர் கலந்தாய்வு
X

பூம்புகார் மீனவர்களுடனான கலந்தாய்வுக்கூட்டத்தில் பேசிய மயிலாடுதுறை எஸ்பி 

கிராமத்தில் உள்ள கல்வி கற்ற மாணவர்கள் தேவையற்ற வம்பு வழக்குகளில் சிக்கி கொள்வதை தவிக்க வேண்டும்.

பூம்புகார் மற்றும் அதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சில நாட்களுக்கு முன் சுருக்கு மடிவலை பிரச்சினை காரணமாக ஏற்பட்ட குழப்பமான மோதல் சூழல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணசிங், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன், சீர்காழி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் . லாமெக், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சதீஷ் மற்றும் பூம்புகார் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் அனைத்து மீனவ கிராமங்களின் மக்களையும் பூம்புகாரில் சந்தித்து, அவர்களின் மனநிலை, தேவைகள் மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார்கள்.

இதில் காவல் கண்காணிப்பாளர் சுகுணசிங் பேசுகையில், அனைத்து மீனவ கிராம மக்களும் மீன்பிடி துறையில் மட்டுமே பயணிப்பதே இந்த சிக்கல்களுக்கு காரணம். கிராமத்தில் உள்ள கல்வி கற்ற மாணவர்கள் தேவையற்ற வம்பு வழக்குகளில் சிக்கி கொள்வதை தவிக்க வேண்டும். அவர்களில் படித்த இளைஞர்களை இனம் கண்டு, அரசு வேலைக்கு எவ்வாறு தயாராவது, எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற அனைத்து உதவிகளையும் செய்ய, ஒரு சிறப்பு குழு அமைத்து முழு ஒத்துழைப்பு தரப்படும் என்றார்.


Tags

Next Story