மயிலாடுதுறை மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
X

மயிலாடுதுறை மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகள் கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோரிடம் விருப்ப மனு பெறப்பட்டது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தே.மு.தி.க. சார்பாக நகர்ப்புற மற்றும் பேரூராட்சி தேர்தலுக்கான ஆலோசனை மற்றும் விருப்ப மனு பெரும் நிகழ்வு தே.மு.தி.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஜலபதி தலைமையில் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க. நிர்வாகிகள் வெற்றி பெற செய்ய கழக நிர்வாகிகள் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்றும் இதனைத் தொடர்ந்து நகர கழக நிர்வாகிகள் மற்றும் பேரூராட்சி கழக நிர்வாகிகள் தங்கள் வார்டுகளில் போட்டியிட மாவட்ட செயலாளர் ஜலபதியிடம் விருப்ப மனுக்களை ஆர்வமுடன் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் சாரங்கபாணி, ராஜ்குமார், கனிமொழி, மாவட்ட மகளிரணி செயலாளர் கலைச்செல்வி, நகர செயலாளர் பண்ணை பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story