இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கால் வெறிச்சோடிய மயிலாடுதுறை மாவட்டம்

இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கால் வெறிச்சோடிய மயிலாடுதுறை மாவட்டம்
X

மயிலாடுதுறை  பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.

இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கால் மயிலாடுதுறை மாவட்டம் வெறிச்சோடி காணப்படுகிறது.

கொரோனா வைரஸ் மூன்றாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. தினந்தோறும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணிவரை ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அறிவித்துள்ளது. மேலும் திரையரங்குகள், சலூன் கடைகள், கோவில்களில் பக்தர்களுக்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கால் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் உள்ளிட்ட பகுதிகளில் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. மயிலாடுதுறை பேருந்து நிலையம் காமராஜர் சாலை பெரியகடைவீதி கூட்டம் நிறைந்த வண்டிக்கார தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர். மயிலாடுதுறை நகரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சிலர் இருசக்கர வாகனங்களில் செல்வதை காணமுடிந்தது. அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.

Tags

Next Story
சும்மா விராட் கோலி மாதிரி ஃபிட்டான வாழ்க்கை வாழணுமா? இதான் டிரிக்ஸ்..!