மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் பொதுமக்கள் குறை தீர் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் பொதுமக்கள் குறை தீர் கூட்டம்
X

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 165 மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல் கோரி 40 மனுக்கள், வேலைவாய்ப்பு கோரி 20 மனுக்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித் தொகை கோரி 15 மனுக்கள், அடிப்படை வசதிகள் கோரி 9 மனுக்கள், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவி தொகை வங்கிக்கடன் கோரி 39 மனுக்கள் உள்ளிட்ட மொத்தம் 165 மனுக்கள் பெறப்பட்டது.

இம்மனுக்களை மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், உதவி ஆணையர் நரேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஸ்ரீகிருஷ்ணன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
தேய்பிறை அஷ்டமி விழா கோலாகலம்: மல்லசமுத்திரம் காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு