மயிலாடுதுறை: பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நில ஆக்கிரமிப்பு அகற்றம்

மயிலாடுதுறை: பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நில ஆக்கிரமிப்பு அகற்றம்
X

ஆக்கிரமிப்பு பணிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள். 

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் 7.2 கி.மீட்டர் தொலைவுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி துவக்கம்.

மயிலாடுதுறை தாலுக்கா மூவலூரில் காவிரியின் கிளை ஆறான பழங்காவேரி பிரிந்து சுமார் 7.2 கிலோமீட்டர் சென்று மயிலாடுதுறை நகரில் முடிவடைகிறது. இந்த இடத்தில் பல்வேறு இடங்களில் வீடுகள், காம்பவுண்ட் சுவர்கள், வேலிகள் அமைத்து ஆக்கிரமிப்புகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாய இடைக்கால உத்தரவின்பேரில் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்று தொடங்கியது.

மூவலூர் தலைப்பில் இருந்து சித்தர்காடு வரை இன்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதில் வீடுகளை தவிர்த்து 24 இடங்களில் மேற்கொள்ளப்பட்டிருந்த காம்பவுண்டு சுவர்கள், வேலிகள் ஆகிய ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறையினர் ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றினர். இப்பணிகளை மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி, வட்டாட்சியர் ராகவன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கண்ணதாசன் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இப்பணி தொடர்ந்து நடைபெறும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
why is ai important to the future