மயிலாடுதுறை மாவட்டம் ஊரடங்கில் வெறிச்சோடியது

மயிலாடுதுறை மாவட்டம் ஊரடங்கில் வெறிச்சோடியது
X

ஊரடங்கில் வெறிச்சோடிய மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் தளரவுகள் அற்ற முழு ஊரடங்கில் சாலைகள் அனைத்து வெறிச்சோடியது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த 24ம் தேதி முதல் 7 நாட்களுக்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, செம்பனார்கோவில், குத்தாலம், மங்கநல்லூர், மணல்மேடு, உள்ளிட்ட பகுதிகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

மேலும் மயிலாடுதுறை மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டு பாதுகாப்புக்காக பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே முடங்கி இருப்பதால் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்