மயிலாடுதுறை பகுதியில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரம், மேட்டூர் அணை திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி
மயிலாடுதுறையில் காவிரி நீர் வருகைக்காக காத்திருக்கும் தூர் வாரப்பட்ட பாசன வாய்க்கால்
காவேரி மேட்டூர் அணையிலிருந்து இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக போற்றப்படும் கடைமடை பகுதியான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் விவசாயிகள் மும்முரமாக குறுவை சாகுபடி பணிகளை துவங்கியுள்ளனர்
இந்நிலையில் மே 26ஆம் தேதி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 97 அடியாக இருந்தது. அணையில் சுமார் 62 டிஎம்சி நீர் இருப்பு தற்போது உள்ளதால் இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மேட்டூர் அணையில் தண்ணீரை திறந்து வைத்தார்.இதனால் டெல்டா மாவட்டமான விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மயிலாடுதுறை, சாகுபடி, பணிகள், தீவிரம், மேட்டூர், அணை, திறப்பு, விவசாயிகள், மகிழ்ச்சி
மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 80,000 ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகளைத் நிலத்தடி நீரைகொண்டு துவங்கிய விவசாயிகள்.
தற்போது மேட்டூர் அணை திறக்கப்படவுள்ளதால் ஆற்றுப்பதசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
நிலத்தை சமன்படுத்துதல், உழவடித்தல், நாற்றங்கால் அமைத்தல், அண்டை வெட்டுதல், பாய்நடவு செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை பாதிக்காத வகையில் அறுவடைப் பணிகளை விவசாயிகளால் மேற்கொள்ள முடியும். மேட்டூர் அணைத் திறக்கப்பட்டு அந்த தண்ணீர் காவிரி கடை மடைப் பகுதி வரை செல்ல வேண்டும்.
மேலும் மேட்டூர் அணை தற்போது திறக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் உயரமும் தற்போது குறுவை சாகுபடி செய்யவும் ஏதுவாக இருக்கும் என்பதால், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு விவசாயிகள் நன்றியை தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu