மயிலாடுதுறை நீதிமன்றத்தில் லோக்அதாலத் மூலம் 366 வழக்குகளுக்கு தீர்வு

மயிலாடுதுறை நீதிமன்றத்தில் லோக்அதாலத் மூலம் 366 வழக்குகளுக்கு தீர்வு
X

மயிலாடுதுறையில் நடந்த மக்கள் நீதிமன்ற விசாரணையில் தீர்வு வழங்கிய நீதிபதி

வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்த நிலையில் லோக்அதாலத் மூலம் 366 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது

மயிலாடுதுறை நீதிமன்றத்தை வழக்கறிஞர்கள் புறக்கணித்திருந்த நிலையில், நீதிமன்றத்தில் (லோக்அதாலத்) மூலம் 366 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மக்கள் நீதிமன்றம் இடையூறின்றி செயல்பட்டதற்கு நீதிபதிகள் நன்றி தெரிவித்தனர்.

மயிலாடுதுறை சார்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கில் எதிர்மனுதாதரான உள்ள மாயூரம் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வீதிவிடங்கன் மீது மாயூரம் வட்ட சட்டப்பணிகளின் தலைவராக உள்ள முதன்மை சார்பு நீதிபதி மயிலாடுதுறை காவல்துறையை பயன்படுத்தி ஒரு மனுவின் மூலமாக பொய்யான வழக்கினை பதிவு செய்துள்ளதாகவும் எனவே, வட்ட சட்டப்பணிகள் தலைவரை மாற்ற வலியுறுத்தி இன்று மக்கள்நீதி மன்றத்தை புறக்கணிப்பதாக மாயூரம் மற்றும் மயிலாடுதுறை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று மயிலாடுதுறை ஒருங்கினைந்த நீதிமன்றத்தில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் (மெகா லோக்அதாலத்) நடைபெற்றது. வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் நீதிபதி கவுதமன் தலைமையில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ரிஸ்வானாபர்வின், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி கார்த்திகா ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்தது. 60க்கும் மேற்பட்ட வழக்குகளின் விசாரணை நடைபெற்றது.

முதன்மை சார்பு நீதிமன்றத்தில் 21 வழக்குகளும், கூடுதல்துணை நீதிமன்றத்தில் 10 வழக்குகளும், மாவட்ட நீதிமன்றத்தில் 4 வழக்குகள், முன்சிப்கோரட்;டில் 2 வழக்குகள் என்று சாலை விபத்து நஷ்டஈடு, குடும்ப விவாகரத்து வழக்குகள், காசோலை வழக்குகள் என்றுமொத்தம் 37 வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட்டது. இதன் மூலம் ஒரு கோடியே 69 லட்சத்து 77 ஆயிரத்து 651 ரூபாய்க்கு தீர்வுகாணப்பட்டது. குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் நீதிபதி அமிர்தம் தலைமையில் 164 வழக்குகளுக்கு தீர்வுகானப்பட்டு 63 ஆயிரத்து 300 ருபாய் அபராதமும், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2ல் நீதிபதி அப்துல்கனி தலைமையில் 158 வழக்குகள் தீர்வுகாணப்பட்டு 25 ஆயிரத்து 200 அபராதம் வசூலிக்கப்பட்டது.

மாயூரம் வக்கீல்கள் சங்கத் தலைவர் வீதிவிடங்கன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மாயூரம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய இரு வழக்கறிஞர் சங்கத்தினரும் நீதிமன்ற புறக்கணிப்பு செய்திருந்த நிலையில்; லோக்அதாலத் வழக்கு விசாரணைக்கான வழக்காடிகளுக்கு எந்தவித இடையூறும் செய்யாமல் இருந்த வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளுக்கு சட்டப்பணிகள் குழு தலைவர் நீதிபதி கவுதமன் நன்றி தெரிவித்தார்.

Tags

Next Story