காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திறந்த வாகனத்தில் வாக்கு சேகரிப்பு

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திறந்த வாகனத்தில் வாக்கு சேகரிப்பு
X
மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திறந்த வாகனத்தில் வாக்கு சேகரிப்பு.

மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ராஜகுமார் திறந்த வாகனத்தில் பரப்புரை மேற்கொண்டார். வேட்பாளர் ராஜகுமார் கழுக்காணிமுட்டம் முத்துமாரியம்மன் கோவிலில் தரிசனம் செய்து அந்த வேட்பாளர் அப்பகுதியில் உள்ள பெண்களிடம் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து திருவிழந்தூர், மாப்படுகை, சோழம்பேட்டை, நீடூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் தான் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பரப்புரையில் ஈடுபட்டார். அவருடன் கூட்டணி கட்சியினர் இருசக்கர வாகனத்தில் சென்று ஆதரவு திரட்டினர்.

Tags

Next Story
ai in business transformation