ஓய்வூதியர் சங்கத்தினர் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர் சங்கத்தினர் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்
X

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஓய்வூதியர் சங்கத்தினர் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரை நாள் தர்ணா போராட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னாள் மாநில துணைத்தலைவர் கணேசன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கோரிக்கைகள் குறித்து விளக்க உரையாற்றினர்.

இந்த போராட்டத்தில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ செலவை திரும்பப்பெற அளிக்கப்பட்ட மனுக்கள் மாவட்ட மற்றும் மாநில எம்பவர் கமிட்டிக்களிடம் நிலுவையில் உள்ளன. உடனடியாக அந்த மனுக்கள் மீது தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்ட எம்பவர் கமிட்டியில் ஓய்வூதியர் சங்க மாவட்ட நிர்வாகி ஒருவரை இடம்பெற செய்ய வேண்டும், தமிழக முதல்வர் சட்டமன்ற தேர்தலின்போது ஓய்வூதியர்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதியின்படி தமிழக அரசால் தற்போது வழங்கப்பட்டு வரும் கூடுதல் ஓய்வூதியம் பெறுவதற்கான வயதை என்பதிலிருந்து 70 ஆக குறைத்திட வேண்டும், சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம ஊழியர்கள், வனத்துறை காவலர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7850 வழங்கிட வேண்டும் 1.4 .2003 முதல் பணியமர்த்தப்பட்ட அனைவருக்கும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Tags

Next Story
ai in future agriculture