மயிலாடுதுறை: அனைத்து நெல் கொள்முதல் நிலையங்கள் மூடல்

மயிலாடுதுறை: அனைத்து நெல் கொள்முதல் நிலையங்கள் மூடல்
X

மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டதால் விவசாயிகள் கவலை.

தமிழகத்தில் நுகர்பொருள் வாணிபக்கழகம் கட்டுப்பாட்டில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றனர். இவற்றிற்கான கணக்குகள் அக்டோபர் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி ஒரு வருடம் என்ற அடிப்படையில் கொள்முதல் நிலையங்களில் காணக்கீடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதனடிபடையில் இன்று செப்டம்பர் 30ம் தேதியோட 2020-2021ம் ஆண்டிற்கான கணக்கு முடிக்கும் பணிகளுக்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு கொள்முதல் செய்யும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்காக 115 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொண்டு வந்து கொள்முதல் நிலையங்களில் காயவைத்து அடுக்கிவைத்து விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் திடீரென கணக்கு முடிப்பு பணிகளுக்காக இன்று முதல் 5நாட்களுக்கு கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அறுவடை செய்த நெல்லை விற்பதற்காக நாள் கணக்கில் கொள்முதல் நிலைய வாசலில் விவசாயிகள் காத்துகிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு அறுவடை சமயத்தில் அடிக்கடி மழைபெய்வதால் நெல்மூட்டைகள் நனைந்து சேதமடைந்து நஷ்டம் ஏற்பட்டது. மேலும் தற்போது கொள்முதல் நிலையம் 5நாட்களுக்கு மூடப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே தினந்தோறும் கொள்முதல் செய்யும் மூட்டைகளின் அளவை அதிகரித்து விரைவில் கொள்முதல் செய்யும் பணியை முடிக்க வேண்டுமென்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil