மயிலாடுதுறை மணிக்கூண்டு கடிகாரத்தை சொந்த செலவில் சீரமைத்த நகர்மன்ற உறுப்பினர்
மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள மணிக்கூண்டு
மயிலாடுதுறையின் பாரம்பரிய அடையாளச் சின்னமாக விளக்கும் மணிக்கூட்டு கடிகாரத்தை சொந்த செலவில் சரிசெய்த த நகரமன்ற திமுக உறுப்பினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
மயிலாடுதுறை கடைவீதியில் மையப்பகுதியில் அமைந்துள்ல மணிக்கூண்டு 1943 - ஆம் ஆண்டு கட்டப்பட்டு, அப்போதைய சென்னை மாநில ஆளுநர் ஹோப் என்ற ஆங்கிலேயரால் திறந்து வைக்கப்பட்டது.
உலகப் போரில் இங்கிலாந்து தொடர்ந்து தோல்வி அடைந்தது. போர் நடந்த எல்லா இடங்களிலும் ஜெர்மனி வெற்றி பெற்றது. இங்கிலாந்தின் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதன் முறையாக டுனீசியாவில் நடந்த போரில் ஜெர்மனிக்கு எதிராக இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் நினைவுச் சின்னமாக மயிலாடுதுறை மணிக்கூண்டை அப்துல் காதர் என்பவர் கட்டினார்.அதன்பின்னர் மயிலாடுதுறையின் முக்கிய அடையாளங்களின் ஓன்றாக இந்த மணிகூண்டு மாறிவிட்டது.
அந்த காலத்தில் இந்த மணிக்கூட்டில் உள்ள கடிகாரத்தை பார்த்தே மக்கள் நேரத்தை தெரிந்து கொண்டனர். இதில் உள்ள கடிகாரம் கடந்த 6ஆண்டுகளுக்கு மேலாக செயல்படாமல் இருந்தது. இது தொடர்பாக பல முறை நகராட்சி நிர்வாகத்திடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அப்பகுதி 16-வது வார்டு திமுக நகரமன்ற உறுப்பினரான சர்வோதயன்(23 )என்பவர் தனது சொந்த செலவில் மணிகூண்டில் உள்ள கடிகாரத்தை சீரமைக்கு இயங்கச் செய்தார். மேலும் மணிக்கூண்டில் பல ஆண்டுகளாக எரியாமல் இருந்த மின் விளக்கையும் அவர் சரி செய்ய நடவடிக்கை எடுத்தார். இவரது செயலை பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu