மயிலாடுதுறை அருகே உணவின்றி தவிக்கும் குரங்குகளுக்கு உணவளித்து வரும் விலங்கு ஆர்வலர்

மயிலாடுதுறை அருகே உணவின்றி தவிக்கும் குரங்குகளுக்கு உணவளித்து வரும் விலங்கு ஆர்வலர்
X
சிதம்பரம்-காரைக்கால் தேசிய நெடுஞ்சாலை சூரக்காட்டில் உணவின்றி தவிக்கும் குரங்குகளுக்கு விலங்குஆர்வலர் உணவு வழங்கி வருகிறார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செங்கமேடு பகுதியை சேர்ந்த விஸ்வநாதன். விலங்கு நல ஆர்வலரான இவர், உணவின்றி தவிக்கும் நாய், பூனை, உள்ளிட்ட விலங்குகளுக்கு தன்னால் முடிந்த அளவு உணவு வழங்கி வருகிறார்.

இந்நிலையில் சிதம்பரம் காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையில் சூரக்காடு என்னும் இடத்தில் ஏராளமான குரங்குகள் கூட்டமாக வசித்து வருகின்றன.

தேசிய நெடுஞ்சாலை என்பதால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினந்தோறும் அவ்வழியே கடந்து செல்லும், அவ்வழியே செல்லும் வாகனங்கள் மூலம் பலரும் குரங்குகளுக்கு உணவு கொடுத்து செல்வார்கள்.

ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக போக்குவரத்து தடைசெய்யப்பட்டு மக்கள் நடமாட்டம் இல்லாததால் அப்பகுதியில் வசிக்கும் ஏராளமான குரங்குகள் உணவின்றி தவித்து வந்தன.

இதனை அறிந்த விலங்கு ஆர்வலர் விஸ்வநாதன் தினந்தோறும் அங்கு சென்று வாழைப்பழம், தர்பூசணி, மாம்பழம் என தன்னால் முடிந்த உணவுகளை குரங்குகளுக்கு வழங்கி அவற்றின் பசியா தீர்த்து வருகிறார்.

மேலும் வாயில்லாத ஜீவன்களுக்கு உணவளிக்க பலரும் முன்வர வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் சென்ற ஆண்டு ஊரடங்கும் போதும் இவர் உணவு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!