மாசி மகத்தை முன்னிட்டு மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் தர்ப்பணம்

மாசி மகத்தை முன்னிட்டு மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் தர்ப்பணம்
X

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் மாசிமகத்தையொட்டி முன்னார்களுக்கு திதி கொடுக்கப்பட்டது.

மாசி மகத்தை முன்னிட்டு மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

மாசி மகத்தன்று கடற்கரை, ஆற்றங்கரை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது நன்மை பயக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் தாக்கத்தால் மாசி மாத திருவிழா மற்றும் தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்த அரசு தடை விதித்து இருந்த நிலையில், தற்போது தடை நீக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில்,மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவேரி துலாக்கட்டம் காசிக்கு இணையான இடமாகும். இங்கு காவிரியில் 12புண்ணிய தீர்த்தங்களும், காசியைப்போன்று விஸ்வநாதர், கேதாரநாத் ஆலயங்களும் கரையிலேயே அமைந்துள்ளது. இங்கு புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

இந்த துலாகட்டத்தில் நீராடினால் தாங்கள் செய்த பாவங்கள் நீங்கி விடும் என்பதும் ஐதீகம். இன்று மாசிமகத்தை முன்னிட்டு காவிரி துலா கட்டத்தில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தும், புனித நீராடியும் வழிபாட்டில் ஈடுபட்டனர். இருப்பினும் காவிரியாற்றில் குறைந்த அளவு தண்ணீர் சென்றதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!