பரதநாட்டியம், சிலம்பத்தில் மயிலாடுதுறை சிறுவன் உலக சாதனை

பரதநாட்டியம், சிலம்பத்தில் மயிலாடுதுறை சிறுவன்  உலக சாதனை
X

பரதநாட்டியத்தில் கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சிறுவன் அஸ்வின்.

34 விநாடிகளில் பரதநாட்டியத்தின் முத்திரைகள், பேதாஸ், நவரசங்களுடன் சிலம்பம் சுற்றிகொண்டு மயிலாடுதுறை சிறுவன் சாதனை செய்து கலாம் உலகசாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.

மயிலாடுதுறையை சேர்ந்த 11 வயது சிறுவன் பரதநாட்டியத்தில் கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் . மயிலாடுதுறையை சேர்ந்த ஹரிபாஸ்கர், கார்குழலி தம்பதியின் மகன் அஸ்வின் இவர் மயிலாடுதுறை அபிநயா டான்ல் அக்காடமி ஆசிரியை உமாமகேஸ்வரியிடம் பரதம் பயின்று வருகிறார்.

மாணவன் அஸ்வின் சிலம்பம் சுற்றிகொண்டே பாதநாட்டியத்தின் முத்திரைகள், பேதாஸ், நவரசங்களை 34 விநாடிகளுக்குள் பதிவு செய்து கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறுவன் அஸ்வின் இந்த சாதனையை படைத்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!