மயிலாடுதுறையில் கருப்பு பூஞ்சை தொற்றால் பெண் ஒருவர் உயிரிழப்பு

மயிலாடுதுறையில் கருப்பு பூஞ்சை தொற்றால் பெண் ஒருவர் உயிரிழப்பு
X
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பெண் கருப்பு பூஞ்சை நோயால் உயிரிழந்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் முத்து. இவர் சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி மீனாவுக்கு(45) கடந்த மாதம் 12-ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

குணமடைந்து வீடு திரும்பிய 6 நாள்கள் கழித்து மீனாவுக்கு இடது கண்ணில் பார்வை குறைவுடன் வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

பரிசோதனையில் மீனாவுக்க கருப்பு பூஞ்சை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு கண் மற்றும் மேலண்ணத்தில் சில பகுதிகள் அகற்றப்பட்டு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தபோது, மீனா கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்;, 5 நாள்களில் கண்ணை அகற்றிவிட வேண்டும் இல்லை என்றால் உயிருக்கே பாதிப்பு ஏற்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தற்போது மீனா கண்கள் அகற்றப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் கருப்பு பூஞ்சையால் பெண் ஒருவர் உயிரிழந்ததை மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!