டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்.

டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்.
X

டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் நடந்த பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறையில் பா.ஜ.க. சார்பில் டாஸ்மாக் கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மயிலாடுதுறை பாஜக நகர அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, பாஜக நகர தலைவர் மோடி.கண்ணன் தலைமை வகித்தார்.

இதில், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், மத்திய அரசு வழக்கறிஞருமாக ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன உரையாற்றினார்.

இதில், பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன முழக்கங்கள் எழுப்பினர். இதேபோல், நகரின் பல்வேறு பகுதிகளில் பாஜக நிர்வாகிகள் தங்கள் வீடுகளின் முன்பு கருப்பு கொடி ஏந்தியும், பதாகைகளை ஏந்தியும் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.

Tags

Next Story
ai based healthcare startups in india