மயிலாடுதுறை: பா.ஜ.க. உள்ளிட்ட மாற்று கட்சியினர் தி.மு.க.வில் ஐக்கியம்

மயிலாடுதுறை: பா.ஜ.க. உள்ளிட்ட மாற்று கட்சியினர்  தி.மு.க.வில் ஐக்கியம்
X





+

தி.மு.க.வில் இணைந்தவர்கள் நிவேதா முருகன் எம்.எல்.ஏ.வுடன் உள்ளனர்.

















































மயிலாடுதுறை மாவட்டத்தில் பா.ஜ.க. உள்ளிட்ட மாற்று கட்சியினர் தி.மு.க.வில் ஐக்கியம் ஆனார்கள்.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை குத்தாலம் மேற்கு ஒன்றியம் கோமல் ஊராட்சியில் இருந்து குத்தாலம் மேற்கு ஒன்றிய செயலாளர்கள் முருகப்பா ஏற்பாட்டில். மயிலாடுதுறை மாவட்டம் பா.ஜ.க. மற்றும் மாற்றுக் கட்சியில் இருந்து 50 க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் முன்னிலையில் பொறையார் கலைஞர் அரங்கத்தில் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் ஊராட்சி செயலாளர் எம் .என். ரவிச்சந்திரன், கோமல் ஊராட்சி மன்றத்தலைவர் எழிலரசி பாலசுப்பிரமணியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பொங்கல் பண்டிகை முடிவில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.30..!