மயிலாடுதுறையில் முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு எம்எல்ஏ நிவேதா முருகன் நிவாரண உதவி

மயிலாடுதுறையில்  முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு  எம்எல்ஏ  நிவேதா முருகன் நிவாரண உதவி
X

மயிலாடுதுறையில் எம்எல்ஏ நிவேதா முருகன் முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.

மாயிலாடுதுறையில் முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு எம்எல்ஏ நிவேதா முருகன் நிவாரண உதவிகளை வழங்கினார்.

முடிதிருத்தும் நிலையங்களை திறக்க முற்றிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.இதனால் அன்றாடம் வேலைக்கு செல்லாமல் தங்கள் வாழ்வாதாரம் இழந்து முடிதிருத்தும் தொழிலாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்..

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன் வழங்கினார் .

5 கிலோ அரிசி, ஒரு வாரத்திற்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை அவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நாகை வடக்கு மாவட்ட செயலாளர் ஞானவேலன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்எம். சித்திக் ஒன்றிய செயலாளர் அன்பழகன் மற்றும், அப்துல்மாலிக் , மற்றும் திமுக கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!