மயிலாடுதுறை அருகே வெளிநாட்டு பறவைகளின் சரணாலயமாக மாறிய பெரம்பூர்
மயிலாடுதுறை அருகே பெரம்பூர் கிராமத்தில் மரங்களில் வெளிநாட்டு பறவைகள் கட்டிய கூடுகள்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே குன்னம் ஊராட்சியில் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதியில் பெரம்பூர் கிராமம் உள்ளது.இந்த கிராமம் எப்பொழுதும் பசுமை நிறைந்த பகுதிகளாக இருந்து வருகின்றது. இப்பகுதியில் விவசாயிகள் மூன்று போகம் நெல், சாகுபடி செய்து வருகின்றனர்.
இப்பகுதியில் எப்போதும் அமைதியான சூழல் நிலவுவதாலும் பறவைகள் தங்கும் இடமாகவும் அமைந்துள்ளது. இப்பகுதியில் இளுப்பை மரம், வேப்பமரம், ஆலமரம், அரசமரம் அதிக அளவில் உள்ளது. அக்டோபர் மாதம் குளிர்ச்சியாக இருக்கும் போது ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த பறவைகள், வக்கா, நீர்காகம், செந்நாரை, வெள்ளைகாகம் உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் கிராமத்தின் இயற்கை சூழலால் பறவைகள் பெரம்பூர் கிராமத்தை தேர்வு செய்து, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் இப்பகுதியில் உள்ள மரங்களில் கூடு கட்டி வாழ்கின்றது. இங்கு இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்று தங்களுக்கு தேவையான இரைகளுக்கு வெளியே சென்று பெரம்பூர் கிராமத்தில் உள்ள தனது கூட்டில் வந்து தங்கிவிடும். இந்த கிராமத்திற்கு பறவைகள் குளிர்காலங்களில் வருவதால் பறவைகள் சரணாலயமாக இருக்கின்றது.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் பெரம்பூர் கிராமத்தில் வெளி நாட்டு பறவைகள் சுமார் 200 க்கும் மேற்பட்ட பறவைகள் கிராமத்தில் தங்கி இங்கேயே மரத்தில் கூடுகட்டி தனது குஞ்சுகளுடன் சொந்த ஊர் திரும்பி செல்கின்றது. வெளிநாட்டு பறவைகளுக்கு இந்த கிராமம் வாழ்வதற்கான சூழல் அமைந்துள்ளதால் இங்கேயே தங்கி வெளிநாட்டில் இருந்து தனியாக வந்து இங்கே இருந்து தனது குஞ்சுகளுடன் சொந்த ஊர் செல்லும் இந்தப் பறவைகளின் செயல்பாடு வியக்கத்தக்கதாக உள்ளது. எனவே எங்கள்கிராம மக்கள் ஒன்று சேர்ந்து இந்தப் பறவைக்கு பாதுகாப்பு அளிக்கின்றோம் என்று கூறுகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu