சாராய தயாரிப்பில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் எஸ்பி.ஸ்ரீநாதா எச்சரிக்கை

சாராய  தயாரிப்பில் ஈடுபட்டால்   கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் எஸ்பி.ஸ்ரீநாதா எச்சரிக்கை
X

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர்  அலுவலகம்  (பைல் படம்)

மயிலாடுதுறை மாவட்டத்தில் சாராயம் தயாரிப்பில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் எஸ்.பி ஸ்ரீநாதா எச்சரித்துள்ளார்.

மயிலாடுதுறையில் நேற்று இருவர் கள்ளச்சாராயம் குடித்ததால் கண்பார்வை குறைபாடு ஏற்பட்டு உயிரிழந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அதே பகுதியை சேர்ந்த வீராசாமி, சரத்குமார், செந்தில், சரண்ராஜ், ஞானப்பிரகாசம், மணக்குடியை சேர்ந்த துரைசாமி ஆகிய 6 பேர் பிரபுவிடமிருந்து கள்ளச்சாராயம் வாங்கி குடித்ததாக கூறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல் கணிகாணிப்பாளர் ஸ்ரீநாதா கூறுகையில்

மயிலாடுதுறை சேந்தங்குடியை சேர்ந்த பிரபு என்பவர் கடந்த 29ம் தேதி மாலை; மூச்சுதிணறல், கண்பார்வை குறைபாடு ஏற்பட்டதாக கூறி மயிலாடுதுறை அரசு அரசு மருத்துவமனையில் சேர்ந்தவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

பிரபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து 30ம்தேதி காலை பிரபுவின் நண்பர் செல்வம் வீட்டில் இருக்கும் போது வயிற்றுவலி, மூச்சுதிணறலால் இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் வீராசாமி, சரத்குமார், சரண்ராஜ், செந்தில் ஆகியோர் பிரபுவிடம் கள்ளச்சாராயம் வாங்கி குடித்ததாக கூறி மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் ஏடிஎஸ்பி பாலமுருகன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டதில் பிரிண்டிங் பிரசில் வேலைபார்த்த பிரபு கெமிக்கல் பயன்பாடு பற்றி தெரிந்திருந்ததால் மெத்தனால், ஏத்தனால் போன்ற ஒரு திரவப்பொருளை(கெமிக்கலை) வாங்கி அதில் சோடா, எலுமிச்சைசாறு ஆகியவற்றை கலந்து பிரபு, செல்வம் இருவரும் ஒருசில நாட்கள் குடித்து பாதிப்பு இல்லை என்று நினைத்து அந்த கலவையை அதே பகுதியை சேர்ந்த 5, 6 பேருக்கு விற்பனை செய்துள்ளனர்.

அதை குடித்ததில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிருடன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்களிடம் விசாரணை செய்தபோது பிரபு கொடுத்த பாட்டிலை கொடுத்தனர். அதில் எந்தவித வாடையும் இன்றி இருந்ததாக கூறினர். அவற்றை பறிமுதல் செய்து அந்த கெமிக்கலை பரிசோதனை செய்வதற்கு ஆய்வுகூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆய்வில்தான் அது எந்த வகையான கெமிக்கல் என்பது தெரியவரும். மெத்தனால் போன்ற ஏதோஒரு வகையான கெமிக்கலாக இருக்கலாம். கள்ளச்சாராயம் காய்ச்சுவது, இதுபோன்று போதை வஸ்த்துக்கள் தயாரித்து விற்பனை செய்வது குறித்து தகவல் தெரிந்தால் பொதுமக்கள் எனது செல் 9498111103 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.

பொது ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் இயங்காததால் குடிமகன்கள் போதைக்காக வேறுவழியை தேடுகின்றனர். மெடிக்கலில் கிடைக்கும் கெமிக்கலை வாங்கி குடிப்பது, ஊரல்போட்டு சாராயம் காய்ச்சும் முயற்சியில் யாராவது ஈடுபடுவது தெரிந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசார் சீர்காழி, பொறையார் காவல்சரத்தில் சாராய ஊரல்கள் பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மெடிக்கல் உரிமையாளர்கள் சங்கத்தினர் டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இன்றி எந்தவித கெமிக்கல் பொருட்களும் பொதுமக்களுக்கு கொடுக்கக்கூடாது என்று அறிவுரை வழங்கியுள்ளோம்.

மெத்தனால், எத்தனால் போன்றவற்றை பொதுமக்களுக்கு வழங்கக்கூடாது. டாஸ்மாக் இயங்காத நேரத்தில் குடிமகன்கள் போதைக்காக கள்ளச்சந்தையில் யாராவது போதைபொருள் கொடுத்த வாங்கி குடித்தால் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் அதனை வாங்கி பயன்படுத்த வேண்டாம் என்றார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!