மயிலாடுதுறை 6-வது வார்டு வாக்குச்சாவடி முகவர்கள் வாக்கு சேகரித்தால் பரபரப்பு

மயிலாடுதுறை 6-வது வார்டு வாக்குச்சாவடி  முகவர்கள் வாக்கு சேகரித்தால் பரபரப்பு
X

மயிலாடுதுறை 6-வது வார்டில் உள்ள பூத்தில் முகவர்கள் வாக்கு செலுத்த வரும் பொதுமக்களிடம் பூத்தின் உள்ளே வாக்கு சேகரித்தால் பரபரப்பு ஏற்பட்டது

இதைக்கண்டித்து வார்டில் போட்டியிடும் அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட வேட்பாளர்கள்அங்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

மயிலாடுதுறை 6-வது வார்டில் உள்ள பூத்தில் முகவர்கள் வாக்கு செலுத்த வரும் பொதுமக்களிடம் பூத்தின் உள்ளே வாக்கு சேகரித்தால் பரபரப்பு.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் 6-வது வார்டில் காஞ்சி சங்கர வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி எண் 8-இல் முகவர்கள் வாக்கு செலுத்த வரும் பொதுமக்களிடம் வாக்குப்பதிவு நடைபெறும் அறையின் உள்ளேயே வாக்கு சேகரித்தால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த வார்டில் போட்டியிடும் அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட வேட்பாளர்கள் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் வந்து அவர்களை அப்புறப்படுத்தினர். இதை தொடர்ந்து, வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெற்று வருகிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!