மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மே தின பேரணி

மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மே தின பேரணி
X

மயிலாடுதுறையில் மே தின பேரணி நடந்தது.

மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மே தின பேரணி நடத்தப்பட்டது.

மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மே தின அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு கட்சியின் முன்னாள் நாகை மாவட்ட அமைப்பாளர் மா.ஈழவளவன் தலைமை நடைபெற்ற பேரணி மயிலாடுதுறை காவிரி நகரில் இருந்து புறப்பட்ட பேரணி பூக்கடைத்தெரு, காமராஜர் சாலை, கண்ணாரத்தெரு வழியாக சென்று மயிலாடுதுறை சின்னக்கடை வீதியை அடைந்தது மே தின பொதுகூட்டம் நடைபெற்றது.

பேரணியில் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை அரசு கைவிட வேண்டும், சிறு வணிகர்களின் வியாபாரத்தை நசுக்கும் கார்ப்பரேட் வணிகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவ மற்றும் இளைஞர் சமுதாயத்தை சீரழிக்கும் போதைப் பொருட்கள் மற்றும் மது வகைப் பொருட்களை அரசு தடை செய்ய வேண்டும், இயற்கை வளங்களான காடுகள், ஆறுகள், மலைகள் உள்ளிட்டவைகளை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த பேரணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!