மயிலாடுதுறையில் கலை நிகழ்ச்சிகளுடன் மே தின விழா கொண்டாட்டம்

மயிலாடுதுறையில் கலை நிகழ்ச்சிகளுடன் மே தின விழா கொண்டாட்டம்
X

மயிலாடுதுறையில் கலை நிகழ்ச்சிகளுடன் மே தினவிழா நடந்தது.

மயிலாடுதுறையில் கலை நிகழ்ச்சிகளுடன் மே தின விழா கொண்டாட்டம் நடந்தது.

மயிலாடுதுறை பொதுத் தொழிலாளர் சங்கத்தின் 37-ஆம் ஆண்டு மே தினவிழா மயிலாடுதுறையில் அச்சங்கத்தின் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெகவீரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. தொடக்கமாக சங்க கொடி ஏற்றப்பட்டது. விழாவில் கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு மயிலாடுதுறையில் மணி மண்டபம் அமைப்பதாக தமிழக அரசு அறிவித்து இருப்பதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் தனபால், மாயூரம் வேதநாயகம் பிள்ளை உருவம் அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் சீர்காழி பகுதியில் இருந்து கலந்து கொண்ட இரண்டு சிறுவர்கள் புலி வேடம் அணிந்து சிலம்பாட்டம் ஆடியது காண்போரை பிரமிக்க வைப்பதாய் அமைந்தது. மின்னல் வேகத்தில் சிறுவர்கள் ஆடிய சிலம்பாட்டத்தை அனைவரும் வைத்த கண் வாங்காமல் பார்த்து மகிழ்ந்தனர். மேலும் நிகழ்ச்சியின் பொய்க்கால் குதிரை வேடமணிந்து சிலம்பாட்ட நிகழ்ச்சி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?