வணிகர் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று கடைகள் மூடல்

வணிகர் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று கடைகள் மூடல்
X

மயிலாடுதுறையில் அடைக்கப்பட்டுள்ள கடைகள். 

வணிகர் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன.

ஆண்டுதோறும் மே 5ஆம் தேதி வணிகர்களால் வணிகர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் வணிகர்கள் தங்கள் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக தங்கள் வணிக நிறுவனங்களை அத்துடன் அன்றைய தினம் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்பது வழக்கம்.

நிகழாண்டு வணிகா் சங்க பேரமைப்பு மாநில மாநாடு திருச்சியில் நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர் பங்கேற்க உள்ளார். இதில் மயிலாடுதுறை மாவட்ட வணிகர்கள் திரளாக பங்கேற்கும் வகையில் இன்றைய தினம் கடையடைப்பு நடத்தப்படுகிறது.

இந்த மாநாட்டில் கடைகளை அடைத்து விட்டு பங்கேற்குமாறு வணிகா்களுக்கு பேரமைப்பின் மாநிலத் தலைவா் விக்கிரமராஜா உள்ளிட்ட நிா்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனா். இதைத் தொடா்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் வணிகா்கள் சங்கத்தின் சாா்பில் கடையடைப்பு நடத்தி மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என சங்கத்தின் நிா்வாகிகள் வணிகா்களைக் கேட்டுக்கொண்டனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை தரங்கம்பாடி சீர்காழி உள்ளிட்ட உள்ளிட்ட தாலுகாக்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil