மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்

மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்
X
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வீட்டுமனைப்பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கோயில், மடம், அறக்கட்டளை, வக்பு வாரியம், தேவாலயங்கள் மற்றும் நீர்நிலை புறம்போக்கில் நீண்டகாலமாக குடியிருந்து வருபவர்களுக்கு குடிமனைப்பட்டா வழங்கக்கோரி நடைபெற்ற போராட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சண்முகம் தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஸ்டாலின், துரைராஜ் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தொடர்ந்து, பட்டா வழங்கக்கோரி மாவட்ட அலுவலக அதிகாரிகளிடம் 1500க்கும் மேற்பட்டோர் மனுக்களை வழங்கினர்.

Tags

Next Story
ai based agriculture in india