மயிலாடுதுறை பிரசன்ன மாரியம்மன் கோயிலில் 38ம் ஆண்டு பால்குட விழா

மயிலாடுதுறை பிரசன்ன மாரியம்மன் கோயிலில் 38ம் ஆண்டு பால்குட விழா
X

பிரசன்ன மாரியம்மன் கோயிலில்,  தை மாத கடைவெள்ளியை முன்னிட்டு 38-வது ஆண்டு பால்குட விழாவில், பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டத்துடன் ஊர்வலம் நடைபெற்றது.

மயிலாடுதுறையில், பிரசித்தி பெற்ற பிரசன்ன மாரியம்மன் கோயிலில், 38-வது ஆண்டு பால்குட விழா நடைபெற்றது

மயிலாடுதுறை வண்டிக்காரத் தெருவில், பிரசித்தி பெற்ற பிரசன்ன மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் தை மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, 38-வது ஆண்டு பால்குட திருவிழா இன்று நடைபெற்றது. இதையொட்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்திலிருந்து பால்குடங்களை எடுத்தும், உடலில் அலகு குத்தியும் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

வழியெங்கும் நடைபெற்ற பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டம் மற்றும் காளியாட்டத்தை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். பின்னர் பிரசன்ன மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

Tags

Next Story
ai marketing future